திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலக தரம் வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில் கொடைக்கானலுக்கு வாரம் தோறும் பல்வேறு மாவட்டங்கள் வெளி மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர்.
மேலும் கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் முறையான பராமரிப்பு இல்லை என்றும் சுற்றுலாத்தலங்கள் முழுவதும் குப்பை மேடாக காட்சியளிக்கின்றது மேலும் கழிப்பறை வசதிகள் குடிநீர் வசதி சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் பணம் பறிப்பது மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ளதாக வெளிநாடு சுற்றுலா பயணி கூறுகிறார்.