கொடைக்கானலில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 1150 மதுபான பாட்டில்கள் பறிமுதல், ஒருவருக்கு வலைவீச்சு நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடைக்கானல் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருமாள்மலையை அடுத்த அடுக்கம் சாமக்காட்டுபள்ளம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 1, 150 மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து செல்வத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.