இந்து முன்னணி மாநிலத் தலைவர் பத்திரிக்கையாளர் சந்திப்பு

69பார்த்தது
திண்டுக்கல் தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி சார்பில் பத்மகிரி மலை மீது பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் சிலை வைப்பதற்காக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணி கலந்துகொண்டு அளித்த பேட்டியில், கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு முகலாய படையெடுப்பில் திண்டுக்கல் மலைக்கோட்டை பத்மகிரி மலையில் இருந்து பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் சிலைகள் கீழே வீசப்பட்டன. பின்னர் இந்திய அரசாங்கம் ஆனது மலைக்கோட்டையை பாதுகாக்க தொல்லியல் துறை எடுத்துக் கொண்டது. மீண்டும் பத்மநாதீஸ்வரர் அபிராமி சிலையை மலையின் மீது அமைக்க கடந்த வாரமாக கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். அடுத்து வரும் பத்து நாட்களுக்கு தொடர்ந்து கையெழுத்து இயக்கம் நடைபெறும். இதில் திண்டுக்கல் மாநகரத்தைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். சமய வேறுபாடு இல்லாமல் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைவரும் கையெழுத்தியக்கத்தில் பங்கேற்றுள்ளனர். ஆகவே மத்திய மாநில அரசுகள் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் உருவ சிலைகளை மலைக்கோட்டை கோயிலில் வைக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எடுத்துள்ளோம் தவறும் பட்சத்தில் வரும் தேர்தலில் பக்தர்கள் தக்க பாடம் கொடுப்பார்கள்.

தொடர்புடைய செய்தி