நிலக்கோட்டையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, கரியாம்பட்டி, நடுப்பட்டியில் இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் கரியாம்பட்டியை சேர்ந்த ஆண்டார் என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சக்திவேல், மருதை, லோகநாதன், ரமேஷ்குமார், விக்னேஷ்வர், கார்த்திக் ஆகியோரை நிலக்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இவர்களின் குற்ற நடவடிக்கைகளை ஒடுக்கும் பொருட்டு எஸ். பி. , பிரதீப் பரிந்துரையில் கலெக்டர் பூங்கொடி அவர்கள் 6 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து 6 பேரையும் நிலக்கோட்டை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.