திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில், துணிப்பை வழங்கும் இயந்திரம் ஒன்று உள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக துணிப்பை வழங்கும் இயந்திரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயிலின் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 ஐந்து ரூபாய் நாணயங்களை அல்லது 1 பத்து ரூபாய் நாணயத்தை பயன்படுத்தி துணிப்பை பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.