உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி

64பார்த்தது
திண்டுக்கல் மாவட்டத்தில் “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ், 12-ஆம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளின் உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரிக் கனவு” நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், முன்னிலையில் திண்டுக்கல் ஜி. டி. என். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி அவர்கள் பேசியதாவது: -

தமிழகத்தில் பள்ளி. கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை படிப்பில் மட்டுமல்லாது, வாழ்க்கையிலும் வெற்றியாளராக்கும் வகையில் திறன் மேம்பாட்டு மற்றும் வழிகாட்டுதல் திட்டமாகிய “நான் முதல்வன்“ என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கென naanmudhalvan. tnschools. gov. in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில், உயர்கல்வி தொடர்பாக மாணவர்களை ஊக்குவித்தல், பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், வணிகம் மற்றும் கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன்வளத்துறை சார்ந்த படிப்புகள், அரசு வேலைவாய்ப்புகள், வங்கிக் கடனுதவிகள், கல்வி உதவித்தொகைகள் தொடர்பாக விளக்கம், வேலைவாய்ப்புத்துறை சார்பில் உயர்கல்வி, வேலைவாய்ப்புகள், முன்னோடி வங்கி சார்பில் கல்விக் கடனுதவிகள், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி