சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 7 பேர் பலி

18309பார்த்தது
சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 7 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று(மே 9) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலையில் வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி