சிக்கன் சவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி

17135பார்த்தது
சிக்கன் சவர்மா சாப்பிட்ட இளைஞர் பலி
மும்பையின் மகாராஷ்டிரா நகரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 19 வயதான பிரதமேஷ் போக்சே என்ற இளைஞர் கெட்டுப்போன சிக்கன் ஷவர்மாவை சாப்பிட்டதால் உயிரிழந்தார். அவரது மாமா ஹமீத் அப்பாஸ் சையத் (40) உடன் மே 3 ஆம் தேதி சிக்கன் சவர்மா சாப்பிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதமேஷ் குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர் மே 5ஆம் தேதி மீண்டும் உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி