திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கொடைக்கானலில் கீழ்மலை கிராமங்களில் ஒன்றான பூலத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தவர் ராஜபாண்டி வயது 15 தந்தை பெயர் அழகர், நிலக்கோட்டையில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழை பெறுவதற்காக நேற்று மதியம் ஒரு மணிக்கு பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் சான்றிதழ் கேட்டுள்ளார் பள்ளி தலைமை ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே என்ன பேச்சு வார்த்தை நடந்தது என்று தெரியவில்லை ராஜபாண்டி வீட்டில் வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் கொடைக்கானல் தாண்டிக்குடி காவல்துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து பள்ளி நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடந்து வருகிறது ராஜபாண்டி பத்தாம் வகுப்பில் 450 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.