தீண்டாமை ஒழிப்பு முன்னணி குடியேறும் போராட்டம்

79பார்த்தது
தலித் மக்களுக்கு வழங்கிய இலவச வீட்டடிமனைகளை அளந்து தரக் கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிலத்தில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது. அது பற்றிய விவரம் வருமாறு.
தோழர் பி. சீனிவாசராவ் நினைவு தினமான செப். 30ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலித் மக்களின் நிலத்திற்கான நேரடி இயக்கத்தை ஆண்டுதோறும் நடத்துவது வழக்கம். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் நிலக்கோட்டை வட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ளது. எம். வாடிப்பட்டி. இந்த ஊரில் உள்ள அருந்ததியர் மக்கள் மற்றும் ஆதிதிராவிடர் மக்களுக்கு கொன்னம்பட்டியில் புல எண். 992, 993-ஏ, 994-3பி2 ஆகிய நிலத்தில் 3 சென்ட் வீதம் 42 குடும்பங்களுக்கு 1997ம் ஆண்டு நிலம் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட 27 ஆண்டு காலமாக நிலம் ஒப்படைதாரர்களுக்கு நிலத்தை அளந்து தராத நிலை உள்ளது. எனவே உடனடியாக பயனாளிகளுக்கு நிலத்தை அளந்து ஒப்படைக்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பின் தலைமையில் நேரடியாக நிலத்தில் இறங்கி கிராம மக்கள் தங்களுக்கு உரித்தான நிலத்தில் உள்ள செடிகொடிகளை, முட்களை வெட்டி அகற்றி சுத்தம் செய்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக வத்தலகுண்டு அருகேயுள்ள அ. பிரிவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கொன்னம்பட்டி கிராமத்தில் உள்ள இலவச வீட்டடி மனை பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி