கேணியில் விழுந்த காட்டுமாடு உயிருடன் மீட்பு!

3674பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மார்க்கம்பட்டி கிராமம் கரந்தமலை அடிவாரத்தில் உள்ளது. இந்நிலையில் மலைப் பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லாததால் வனப்குதியில் இருந்த காட்டுமாடுகள் ஊருக்குள் வந்து விடுகின்றன.

இந்நிலையில் கரந்தமலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் காட்டு மாடு கன்று குட்டியுடன் நேற்று இரவு அங்குள்ள கிணற்றில் தண்ணீர் காக இறங்கிய பொழுது தவறி விழுந்தது. இன்று காலை விவசாயி தோட்டத்துக்குச் சென்ற பொழுது காட்டு மாடு கேணியில் விழுந்தது தெரிய வந்தது. இது பற்றி நத்தம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் பாதை அமைத்து காட்டுமாடை 3 மணி நேரமாக போராடி உயிருடன் மீது வனத்தில் பகுதியில் விட்டனர்.

தொடர்புடைய செய்தி