திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளி புதூர் ஊராட்சி தேத்தாம்பட்டிக்கு மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது இயக்கப்படவில்லை. இதைக் கண்டித்து ஊர் பொதுமக்கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று(செப்.18) இரவு ஊர் பொதுமக்களுடன் நத்தம் வட்டாட்சியர் சரவணக்குமார், மண்டல துணை வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.