திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோட்டையூரில் 3 மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் நத்தம் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் கலைந்து சென்றனர்.