நொச்சியோடைப்பட்டி காங்கேயன் திருக்கோயில் குடமுழுக்கு விழா

53பார்த்தது
நொச்சியோடைப்பட்டி காங்கேயன் திருக்கோயில் குடமுழுக்கு விழா
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கூவனூத்து ஊராட்சிக்கு உட்பட்ட நொச்சியோடைப்பட்டியில் ஸ்ரீ காங்கேயன், வடபத்ரகாளியம்மன், கருப்புசாமி, மதுரை வீரன், பெரிய ஆண்டவர், சின்ன ஆண்டவர், அய்யனார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மஹா குடமுழுக்கு நடைபெற்றது.

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலை மங்கள இசை, விநாயகர் வழிபாடு மகாலட்சுமி ஹோமம், சுதர்சன் ஹோமம், நவகிரக ஹோமம், நிலத்தேவர் வழிபாடு, புனித மண் எடுத்து முளைப்பாலிகை இடுதல் முதற்கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

பின்னர் இரண்டாம் கால யாக பூஜை, வேதபாராயணம், மூல மந்திர ஹோமம், நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகளும் மகாபூர்ணாகுதி கடம்வலம் வந்த பிறகு கலசங்களுக்கு தீபாராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த கர்நாடகா, ஆந்திரா, அய்யனார் அருவி, அழகர்மலை, கரந்த மலை, காசி, ராமேசுவரம், கொடுமுடி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோபுர உச்சிக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க புனித தீர்த்தம் கலசத்தின் மீது ஊற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி