திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி வண்டிப்பாதை பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவர் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இன்று (மார்ச் 14) வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.