நத்தம் கிரிக்கெட் மைதானத்தில் திடீரென புகுந்த நாய்

80பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் என்பிஆர் கல்லூரி மைதானத்தில் தமிழ்நாடு பிரீமியர் லீக் 8 வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும், சீகம் மதுரை பேந்தர்ஸ் அணியும் விளையாடி வருகிறது. சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 10 ஓவர்கள் விளையாடிக்கொண்டிருந்த போது திடீரென தெரு நாய் ஒன்று மைதானத்தில் நுழைந்தது. மைதானத்தில் நுழைந்த நாய் அங்கும் இங்கும் சுற்றியபடி திரிந்தது. கிரிக்கெட் வீரர்களும் மைதான ஊழியர்களும் சேர்ந்து நீண்ட நேரம் மைதானத்தில் போக்கு காட்டிய நாயை ஒரு வழியாக போராடி வெளியேற்றினர். இதனால் மைதானத்தில் இருந்த பார்வையாளர்கள், வீரர்கள் மற்றும் உழியர்கள் மத்தியில் சிறிது நேரம் சுவாரசியம் ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி