தமிழறிஞரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா அவர்களது மனைவி ஜெயபாய் (86) அம்மையார் காலமானார். ஆசிரியை ஜெயபாய் (86) அம்மையார் அவர்களின் பூத உடல், மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு, தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்பட பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சாலமன் பாப்பையா, ஜெயபாய் அம்மார் தம்பதிக்கு தியாகமூர்த்தி என்ற மகனும், விமலா என்ற மகளும் உள்ளனர்