கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில், சென்னை ஐஐடி-யின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் காமகோடி கலந்துகொண்டார். அங்கு மாணவர்களிடம் பேசிய அவர், “இந்திய நாட்டின் அனைத்து விதமான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உள்நாட்டு உற்பத்தி அவசியம். வெளிநாட்டினரின் தேவை இல்லாமல் நமக்கு நாமே என்ற நிலை அவசியம். நவீன தொழில் நுட்பங்களை நாமே உருவாக்கி தொழில் முனைவோர்களாக மாறுவதற்கு இனி இளைஞர்கள் தயாராக வேண்டும்” என்றார்.