இலங்கையின் கண்டி மாவட்டம் அம்பரப்பொல பகுதியில், சாலையில் நடந்து சென்ற இரண்டு பள்ளி மாணவிகளில் ஒருவரை, காரில் சென்ற கும்பல் கடத்தியது. இதனைப் பார்த்த ஒருவர் ஓடிச் சென்று அந்நபரை இருக்கிப் பிடித்தார். இருந்தபோதிலும் அந்த கார் வேகமாக சென்றது. இதுகுறித்து மாணவியின் உறவினர்கள் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்த பதறவைக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.