சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் உள்ள டின்மினி கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணியை அவரது குடும்பத்தினர் தாக்கியுள்ளனர். ஒரு சிறிய தகராறு காரணமாக, அந்த கர்ப்பிணியை அவரது மாமியார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கீழே தள்ளிவிட்டு கண்மூடித்தனமாக அடித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நேற்று (ஜன.11) போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.