விவசாயிகளை குண்டுக்கட்டாக தூக்கி எறிந்த அதிகாரிகள்

74பார்த்தது
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தர்மத்துப்பட்டி கோம்பை செல்லும் சாலையில் கடந்த பல வருடங்களாக பூசாரி நல்லா செட்டியார் உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். நிலம் இதே பகுதியில கோயிலுக்கு சொந்தமான நிலம் எனக் கூறப்படுகிறது. மேலும் இதே கோயிலில் நல்லா செட்டியார் பூசாரி ஆக உள்ளதால் இந்த நிலத்தை பல ஆண்டுகளாக விவசாயம் செய்து தங்களது வாழ்வாதாரத்தை வளர்த்து வருகின்றனர்.

அதேபோல் தர்மத்துப்பட்டி கோம்பை சாலை அமைக்கும் பணி துவக்கியது. சாலை அமைக்கும் போது சம்பந்தப்பட்ட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளையும் அதே போல் விவசாய நிலங்களையும் அழித்து சாலை அமைக்கப்படுவதாக அதிகாரிகள் கூறியதால் தொடர்ந்து இப்பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் விவசாய நிலத்தில் 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளது தொடர்ந்து சாலை அமைக்கும் பணிக்காக அதிகாரிகள் மிரட்டி வருவதாக கூறி விவசாய சங்கம் சார்பாக இன்று சம்பந்தப்பட்ட இடத்தில் போராட்டம் அறிவித்திருந்தனர்

இதை எடுத்து சம்பந்தப்பட்ட பகுதிக்கு வந்த அதிகாரிகள் காவல்துறை உதவியுடன் போராட்டம் நடத்திய அனைவரையும் கொண்டு கட்டாக தூக்கி வெளியேற்றிவிட்டு 40க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுகினர்

தொடர்ந்து இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி