யாரும் சிகரெட், மது குடிக்காதீர்கள் ஆதீனம் பேச்சு

59பார்த்தது
திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த நிகழ்வில் மதுரை ஆதீனம் "ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி" கலந்து கொண்டுள்ளார். திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து துவங்கிய விநாயகர் சிலை ஊர்வலம் நான்கு முக்கிய வீதியில் வழியாக கோட்டைகுளத்தை அடைந்து அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. பின் மதுரை ஆதீனம் விழாவில் பேசும்போது, பழனி மாநாடு சென்றதும் இரண்டு கோரிக்கைகளை வைத்தேன். மதுவை நிறுத்துங்கள், சிகரெட்டை நிறுத்துங்கள்
டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் யாரும் போகாதீர்கள். நீங்கள் போவதால்தான் அவர்கள் கடையை திறக்கிறார்கள். அரசாங்கத்தை நான் குறை சொல்ல மாட்டேன். அவர்களுக்கு வருமானம் தேவை அதனால் டாஸ்மாக்கை திறந்து வைக்கிறார்கள். காமராஜர் படிக்கச் சொன்னார் நான் அவ்வளவுதான் சொல்வேன். (ஒன்று என்றால் இரண்டு என்று கூறி விடுவார்கள்) மாமிசம் சாப்பிடாதீர்கள். சைவமாக மாறுங்கள். காவல்துறையை பாதுகாக்க வேண்டும். காவல்துறையை யாரும் திட்டக்கூடாது. தமிழக காவல்துறையை போல் உலகில் எங்கும் இல்லை. தமிழக அரசிடம் மோதலாக செல்லாமல் காதலாக செல்வோம்" என தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி