பாமக வேட்பாளர் திலகபாமா தீவிர வாக்கு சேகரிப்பு

582பார்த்தது
மோடி அவர்கள் என்ன செய்தார் என திமுக அதிமுகவும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஏழை எளியவர்களுக்கு வீடு கொடுக்கும் திட்டம் பெண்களுக்கு ஆண்டுதோறும் 12 சிலிண்டர் வழங்கும் திட்டம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கும் திட்டம் 5 லட்ச ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு திட்டம் இதை கலைஞர் காப்பீடு திட்டம் என பேரை மாற்றி கொள்கிறார்கள்.

ஸ்டாலின் பதவியில் 33 மாதங்கள் ஆகிவிட்டது மாதம் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் அதை வழங்கியிருந்தால் நமக்கு 33, 000 வந்திருக்கும். ஆனால் வழங்கவில்லை தேர்தலுக்குப் பிறகு ஆயிரம் ரூபாய் கொடுக்கலாமா வேணாமா என்று யோசித்து வருகின்றனர். கேட்டால் நிதி இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் கருணாநிதிக்கு நடுக்கடலில் பேனா வைக்க 200 கோடி ரூபாய் நிதி எங்கே இருந்து வருகிறது.

சென்ற முறை திமுக பாராளுமன்ற உறுப்பினரான வெற்றி பெற்றவர் இந்தியாவிலே ஐந்து லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார். ஆனால் அவர் எந்த பகுதிக்கும் நடமாடியதில்லை எங்கோ ஓரிடத்தில் பைனான்ஸ் கம்பெனி வைத்து கட்சிக்கு சில கோடிகளை வழங்கியுள்ளார். ஐந்து ஆண்டுக்கு 25 கோடிகள் அதை எந்தப் பகுதிகளில் மக்கள் திட்ட பணிகளுக்காக செய்துள்ளாரா அவர் பெயரில் எங்கே ஏதும் திட்டப்படிகள் கல்வெட்டு உள்ளதா நானும் அனைத்து பகுதிகளிலும் சென்று பார்த்த பொழுது எங்கேயும் இருந்ததாக தெரியவில்லை.

தொடர்புடைய செய்தி