பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு

68பார்த்தது
பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் ஆர். வி. எஸ். பத்மாவதி தோட்டக்கலை கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாணவிகள் எஸ். மெளனிகா, தா. நச்சத்திரா, இரா. நிரஞ்சனா, இரா. நித்திலா, ரா. பிரியதர்ஷினி , சி. பிரியங்கா ஆகியோர் விவசாயிகளிடம் பட்டுப்புழு வளர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் கூறியதாவது: பட்டுப்புழு வளர்ப்பு மூலம் ஏராளமான வருமானங்களை ஈட்டலாம். பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் உட்கார்ந்து சம்பாதிக்கும் ஒரு உன்னத தொழில். இந்தப் புழுக்களை விவசாயிகள் வளர்த்தால், நல்ல பொருள் ஈட்டலாம்.

அதுமட்டுமில்லாமல் விவசாயிகளின் வாழ்க்கைத் தரமும் உயரும். யாரிடமும் கடன் வாங்க வேண்டிய , கைகட்டி பதில் சொல்ல வேண்டிய அவசியம் வராது. பட்டுப்புழு வளர்ப்பின் நேர்த்திகளை விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டும். புழுக்களுக்கு நோய் தாக்காமல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். புழுக்களுக்கு தேவையான மல்பரி செடிகளை உணவுகளாக நாம் அளிக்க வேண்டும். இவ்வாறு விழிப்புணர்வை மாணவிகள் ஏற்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி