நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் இளநிலை பட்டப் படிப்புகளில் சுற்றுச்சூழல் கல்வி பாடத்திட்டத்தை சேர்ப்பது தொடர்பாக யுஜிசி முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. சுற்றுச்சூழல் கல்வி பாடத்தில் பருவநிலை மாற்றம், கழிவு மேலாண்மை உள்ளிட்டவை இடம்பெற வேண்டும் என்றும் குழு கற்பித்தல் உள்ளிட்ட புதிய அணுகுமுறையை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.