தல தோனி அரசியலுக்கு வர வேண்டும் என்று ஆனந்த் மஹிந்திரா கூறியுள்ளார். அவர், "அடுத்த வருட
ஐபிஎல் தொடரிலும் எம்.எஸ்.தோனி விளையாடலாம் என்பதை அறிந்து பெரும்பாலான சென்னை ரசிகர்களைப் போலவே நானும் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் அந்த மகிழ்ச்சியை நீண்டகாலம் எதிர்பார்க்க முடியாது. ஏனெனில்,
தோனி அரசியல் களத்தை கருத்தில் கொள்ளவார் என்று நான் நம்புகிறேன்" என்று ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.