ஜூலை 10, 2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் முதல் பேட்டிங் செய்த நியூசிலாந்து 239 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. ஆரம்பத்தில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்து தடுமாறியது. 49வது ஓவரில் மார்ட்டின் கப்டில் வீசியா த்ரோ நேராக ஸ்டெம்பை பதம் பார்க்க, மில்லி மீட்டர் கணக்கில் தோனி ரன் அவுட்டாகி நடையைக்கட்டினார். இந்த சம்பவம் இந்தியர்களின் மனதில் ஆறாத ரணத்தை உருவாக்கியது.