ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி முக்கிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். 2025 மெகா ஏலத்திற்கான விதிகள் மற்றும் கொள்கையை அறிவித்த பின்னரே இந்த லீக்கில் தொடர்வது குறித்த தனது முடிவை அறிவிப்பேன் என்று அவர் தெளிவுபடுத்தினார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த தோனி, ஐபிஎல்-ல் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.