ஸ்ரீரங்கம் கோவிலில் 2015ம் ஆண்டு குடமுழுக்கின் போது கொடிமரம் அருகே இருந்த கம்பத்தடி ஆஞ்சநேயர் சிலை கோவில் நிர்வாகத்தால் நகர்த்தி வைக்கப்பட்டது. இதற்கு திருமால் அடியார் குழாம் அமைப்பினர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே இருந்த இடத்தில் ஆஞ்சநேயர் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று 200க்கும் மேற்பட்டோர் கொடிமரம் அருகே திரண்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் காவல் உதவியாளர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.