தமிழ்நாட்டில் பெருங்கற்கால புதைவிடங்கள் கண்டுபிடிப்பு

53பார்த்தது
தமிழ்நாட்டில் பெருங்கற்கால புதைவிடங்கள் கண்டுபிடிப்பு
திருவண்ணாமலை ஜவ்வாது மலைப் பகுதியில் பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியில் 100 பெருங்கற்கால புதைவிடங்களை தமிழக தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதில் பெரும்பாலான புதைவிடங்கள் ‘மென்ஹிர்’ என்று அழைக்கப்படும் நினைவு தூண்களாகவே இருக்கின்றன. மென்ஹிர்களில் இறந்த பிறகு உடலுடன் வைத்துப் புதைக்கப்படும் எந்த ஒரு பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் புதை குழிகள் ஒவ்வொன்றும் 7.5மீ நீளமும், 1.5மீ அகலமும் கொண்டதாக இருக்கிறது. இதில் நிறைய புதை குழிகள் கிரானைட் கற்கள் கொண்டு தெற்கு மேற்காகவும், வடக்கு கிழக்காகவும் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி