ஜெயலலிதா மறைந்த பிறகு இபிஎஸ், சசிகலா அணியில் இருந்தார். சசிகலா முதலமைச்சராக முயற்சித்தபோது, ஓ.பி.எஸ். தர்ம யுத்தம் என காமெடி செய்தார். சசிகலா சிறைக்கு போனதும் கூவத்தூர் கவனிப்புகளால், தரையில் ஊர்ந்து முதலமைச்சரானார் பழனிசாமி. பிறகு RK நகரில் டிடிவி தினகரனுக்காக பரப்புரை செய்தார். பிறகு ஓ.பி.எஸ். உடன் சேர்ந்து டிடிவி தினகரனுக்கு எதிராக பரப்புரை செய்தார். அடுத்ததாக அதிமுக பொதுக்குழுவில் ஓ.பி.எஸ்.க்கு வாட்டர் பாட்டில் மரியாதை அளிக்கப்பட்டது. ஒரு மெகா சீரியலின் கதை போன்ற குழப்பங்கள் நிறைந்த துரோகக் கதைதான் பழனிசாமியின் கதை என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.