மருந்துகளின் விலை 12% உயர்வா? சுகாதாரத்துறை விளக்கம்

82பார்த்தது
மருந்துகளின் விலை 12% உயர்வா? சுகாதாரத்துறை விளக்கம்
இந்தியாவில் அத்தியாவசிய மருந்துகளுக்கான விலை 12% உயரும் என்ற தகவலுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ரூ.90 முதல் ரூ.261 விலையிலான மருந்துகளுக்கு 0.00551% விலை உயர்வு நடப்பு ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில செய்தி நிறுவனங்கள் மருந்துகளுக்கு 12% விலை உயர்த்தப்படுகிறது என்று தவறான தகவலை வெளியிட்டனர். இதனால் நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, இதய நோய் போன்ற நீண்ட காலமாக மருந்துகளை உட்கொண்டு வருபவர்கள் கலக்கமடைந்தனர். இந்த நிலையில் இந்த தகவலுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. “புதிய விலை உயர்வு 0.1 பைசாவிற்கும் குறைவாகவே இருக்கும். எனவே மருந்துகளை வாங்குவோர் அச்சப்படத் தேவையில்லை” என விளக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி