மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுகவுக்கு ஆதரவளித்த புரட்சி பாரதம் கட்சி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. கூட்டணியில் இருந்தாலும் எங்களுக்கு தொகுதி ஒதுக்கப்படவில்லை. இருந்தாலும் நாங்கள் அதிமுகவிற்கு எங்களது முழு ஆதரவையும் அளிப்போம் என அந்த கட்சி கூறியிருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தங்களது ஆதரவை வழங்கியுள்ளது.