வரத்து சரிவால் தக்காளி விலை உயர்வு

53பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் தக்காளி பயிரிடப்பட்டு வருகின்றது தர்மபுரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் தக்காளிகள் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், மற்றும் கேரளா, பெங்களூர் போன்ற வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் சூழலில் சமீப காலமாக தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தக்காளி சாகுபடி பாதிக்கப்பட்டு உழவர் சந்தைக்கு கொண்டு வரப்படும் தக்காளின் வரத்து சரிந்துள்ளது. கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஒரு கிலோ தக்காளி 8 ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று தர்மபுரி உழவர் சந்தையில் ஒரு கிலோ தக்காளி 46 ரூபாய் முதல் 58 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வரத்து சரிவு தொடர்ந்தால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி