கோயம்புத்தூர்: கருமத்தம்பட்டி பகுதியில் வசித்து வரும் முருகவேல்- சுமித்ரா தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், சுமித்ரா தனது கள்ளக்காதலன் முனியாண்டிடன் பல முறை ஓட்டம் பிடித்துள்ளார். அதன்பின் போலீஸார், சுமித்ராவை கண்டுபிடித்து கணவருடன் அனுப்பி வைத்தனர். முருகவேல் வேலை முடிந்து வந்த போது முனியாண்டி தனது வீட்டில் இருந்து வெளியே வருவதை பார்த்து கோபமடைந்தார். ஆத்திரத்தில் முருகவேல் முனியாண்டியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.