கோவை மத்திய சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஆயுள் தண்டனை கைதி விக்ரம் வீடியோ கால் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தனது வழக்கறிஞருக்கு வீடியோ கால் செய்து இதனை தெரிவித்துள்ளார். சில காவலர்களின் பெயரையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சிறையில் கடந்த வாரம் ஆயுள் கைதி ஏசுதாஸ் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்போது மற்றொரு கைதி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.