2022 ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 462 பேர் சாலை விபத்துகளில் இறந்ததாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், 2022 ஆம் ஆண்டில் சுமார் 1.68 லட்சம் பேர் சாலை விபத்துகளில் இறந்ததாக கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உ.பியில் 22,595 இறப்புகள் பதிவாகியுள்ளன. உ.பி.க்குப் பிறகு, சாலை விபத்துகளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் தமிழ்நாட்டில் (17,884) பதிவாகியுள்ளன.