பெண்கள் கருத்தரிப்பதற்கும், ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுப்பதற்கும் 21 முதல் 30 வயது வரை சிறந்த காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் கருப்பை ஆரோக்கியமாகவும், வளமாகவும் இருக்கும். 30 வயதிற்கு பின்னர் கருப்பையின் செயல்பாடு மற்றும் கருவுறுதல் படிப்படியாக குறையும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் கருத்தரிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகி கருப்பையின் ஆரோக்கியம் மற்றும் கருமுட்டைகளின் தரத்தை மதிப்பிட்டுக் கொள்வது மிக அவசியமாகும்.