மார்ச் 24, 25 தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என வங்கி தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "வங்கிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரத்திற்கு 5 நாட்கள் வேலை நாளாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் 24 மற்றும் 25-ம் தேதிகளில் 48 மணி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில், 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளன.