தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கெங்கான் கெட்டாய்யில் நேற்று இரவு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'பதினெட்டாம் போர் காலம்' நாடகம் சிறப்பாக நடைபெற்றது. தியாகி சுப்பிரமணிய சிவா கிராமிய நாடக குழு சார்பில் நாடகம் நடத்தப்பட்டது. பாரம்பரிய கிராமிய கலைகளை உயிர்ப்பிக்கும் நோக்கில் இது போன்ற நாடகங்களை கிராமப்புறங்களில் இந்த குழுவால் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. பதினெட்டாம் போர் காலம் நாடகம் தமிழ் மண்ணின் வீர வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டது இன்னும் நாடகத்தைக் காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கூடி விடிய விடிய நாடகத்தை கண்டு ரசித்தனர்.