தர்மபுரி மாவட்டத்தில் விவசாய தொழில் பிரதான தொழிலாக இருந்து வருகிறது இந்த நிலையில் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும் வகையிலும் நுகர்வோருக்கு குறைந்த விலையில் தரமான காய்கறிகள் கிடைக்கும் எனவே வேளாண்மை துறையின் கீழ் மாவட்டத்தில் 5 இடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபாடு செய்வோர் காய்கறிகள் வாங்க அதிக அளவில் வந்து செல்வதால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விற்பனை அதிகரித்து காணப்படும்.
இன்று புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால் தர்மபுரி உழவர் சந்தைக்கு 136 விவசாயிகள் கொண்டு வந்த 3, 145 கிலோ காய்கறிகளும் 6, 061 கிலோ பழங்கள் என மொத்தம் கிலோ விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை 7212 மேற்பட்ட நுகர்வோர்கள் ரூ. 15, 38, 000 மதிப்பிலான காய்கறிகளை வாங்கி சென்றனர். இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.