தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் 44 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நேற்று(நவம்பர் 22) மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கக் கொடியை ஏற்றி வைத்து சங்க உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் கோவிந்த்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சுகமதி கோடியேற்றிவைத்தார். ஏ குமார், ஸ்ரீ ஜான் ஜோசப், தனசேகர், சீனிவாசன், முருகன், குணசேகரன், பாலகிருஷ்ணன் சீனிவாசன், மகளிர் அணி ராதா ஆகியோர் கலந்து கொண்டனர்.