தருமபுரி கிழக்கு மாவட்ட திமுகபுதிய பொறுப்பாள ஆ. மணி எம். பி. நியமிக்கப்பட்டு உள்ளார். புதிதாக நியமிக்கப்பட்ட பின் முதல் முறையாக இன்று தருமபுரி வருகை தரும் அவருக்கு இன்று காலை ஒட்டப்பட்டி அவ்வை வழி பஸ் நிறுத்தத்தில் திமுக சார்பில் நகர செயலாளர் நாட்டான் மாது தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள மேடையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உருவ படத்திற்கு வக்கீல் ஆ. மணி எம். பி. மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தருமபுரியில் உள்ள 4 ரோடு பகுதியில் அண்ணா, சிலை. பெரியார் சிலை அம்பேத்கர் சிலை. ஆகியோரது உருவ சிலைகளுக்கும், கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது உருவப்படங்களுக்கும் மாலை அணிவித்து புதிய மாவட்ட பொறுப்பாளர் வக்கீல். ஆ. மணி எம். பி. மரியாதை செலுத்தினார்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பெரியண்ணன். தர்மபுரி ஒன்றிய செயலாளர் காவேரி. நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம். கோட்டை கோவில் அறங்காவலர் குழு தலைவர் சுருளிராஜன். சுற்றுச்சூழல் மாவட்ட அமைப்பாளர் இளையசங்கர். தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் கௌதம் உதயசூரியன். தர்மபுரி நகர மன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு அமைப்பாளர் குமார். நற்சுவை சுகுமார் என பலர் கலந்து கொண்டனர்.