தர்மபுரி: சோகத்தூரில் துணை முதல்வர் பிறந்த நாள் கொண்டாட்டம்

75பார்த்தது
தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதனடிப்படையில் தருமபுரி கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் NPபெரியண்ணன் ஏற்பாட்டில் சோகத்தூரில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவிகள் மற்றும் முதியோர்களுக்கு அசைவ உணவை கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி இன்று பிற்பகல் வழங்கினார். இதில் அவை தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தங்கமணி, தர்மபுரி ஓன்றிய செயலாளர்கள் காவேரி, வீரமணி மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர்கள் உதயசூரியன், சூர்யா பிரவீன் குமார். செல்வராஜ். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி