சுக்கான் கீரையை புளி சேர்க்காமல் பாசிப் பருப்புடன் கலந்து வேகவைத்து மதிய உணவில் சேர்த்துக்கொண்டால் குடல்புண்கள் வேகமாக குணமாகும். இதயம் ஒரு நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிந்து துடிக்கும். இந்த துடிப்புகளில் மாறுபாடுகள் ஏற்படுமானால் உடலில் ஏதோ ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். உணவில் தினந்தோறும் சுக்கான் கீரையை சேர்த்துக்கொண்டால் இதயம் நன்கு பலமாகி, அதன் இயக்கம் சீராகும்.