ரூ.1 கோடி ஒதுக்கீட்டில் 200 பெண்களுக்கு சுயத்தொழில் செய்வதற்கு ரூ 50,000 வழங்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு இந்த பணம் வழங்கப்பட உள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் இதற்கு விண்ணப்பிக்க தங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.