நடிகர் ரஜினிகாந்த் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பரிசோதனைக்காக இதய சிகிச்சை நிபுணரிடம் அனுமதி கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று (செப். 30) மாலையில் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்ட நிலையில் இன்று (அக். 1) காலை மருத்துவப் பரிசோதனை நடைபெற உள்ளது. ரஜினிகாந்த் பரிசோதனைக்காக மட்டுமே அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அறுவை சிகிச்சைக்காக இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.