தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பிக்கம்பட்டி அடுத்த கோரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி, இவருக்கு திருமணம் முடிந்து செல்வி என்ற மனைவியும், செந்தில்குமார் (வயது 20) என்ற மகனும், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் மகன் செந்தில்குமார் கிருஷ்ணகிரியில் உள்ள அரசு கலை கல்லூரியில் பி ஏ தமிழ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். வாரம் ஒரு முறை வீட்டிற்கு வந்து செல்லும் அவர் கடந்த 24 ஆம் தேதி கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது உள்பக்கம் தாலிட்டு சதீஷ்குமார் புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.