தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட டவுன் 7வது வார்டு குப்பாகவுண்டர் தெருவை சேர்ந்த அன்பழகன் வயது 67. இவருக்கு ஜெயலக்ஷ்மி என்ற மனைவி மூன்று மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இதில் அன்பழகன் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாதவராக இருந்தார். இவர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒகேனக்கல் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த,. மார்ச் 22 ஆம் தேதி அன்று காலை ஒகேனக்கல் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அதனை அடுத்து, இன்று அதிகாலை அன்பழகன் காவிரி ஆற்றங்கரை ஓரம் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து, ஒகேனக்கல் காவலர்களுக்கு தகவல் தெரிந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.