தர்மபுரி: வத்தல்மலை அடிவாரத்தில் வெள்ளப்பெருக்கு

63பார்த்தது
தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பொழிந்து வரும் சூழலில் அக்டோபர் 19 நேற்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தல்மலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக நேற்று மாலை வத்தல் மாலை அடிவாரப் பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது மேலும் மழை நீர் செந்நீராக பலத்த சத்துடன் சென்றதால் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர் மேலும் வனத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் கரையோரங்களில் உள்ள பகுதிகளில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி